TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 24 , 2021 1159 days 611 0
  • 2021 ஆம் ஆண்டு ஜுன் 21 ஆம் தேதியன்று இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக 80 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் போடப்பட்டன.
    • இந்த (ஜுன் 21) நாளிலிருந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்காக மாநிலங்களுssக்கு இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கப் பட்டன.
  • பெருந் தடுப்பு பவளப்பாறைகளை (கிரேட் பேரியர் பவளப் பாறை) ஆபத்தில் உள்ள உலகப் பாரம்பரிய தளங்கள்எனும் ஒரு பட்டியலில் சேர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் குழுவானது பரிந்துரை செய்துள்ளது.
    • பெருந் தடுப்பு பவளப் பாறைகளானவை ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து என்ற பகுதியின் கடற்கரை அருகேயுள்ள பவளப்பாறைக் கடலில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறை அமைப்பாகும்.
  • இஸ்ரேலிய ராணுவமானது ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட உயர்திறன் உடைய வான்வழி லேசர் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதித்துள்ளது.
    • எல்பிட் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனமானது இதன் முன்மாதிரி (prototype) ஒன்றை உருவாக்கி உள்ளது.
  • இந்தியக் கரைமப் பிரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பினுடைய (Solvent Extractors’ Association of India) தரவுகளின் படி, 2020-21 ஆம் ஆண்டில் மலேசியா நாடானது இந்தியாவிற்கு அதிகளவில் கச்சா பனை எண்ணையினை ஏற்றுமதி செய்யும் ஒரு நாடான இந்தோனேசியாவை முந்தியுள்ளது.
    • இந்தோனேசியா கடந்த ஆண்டு உணவு எண்ணெய்களின் மீது அதிகப் படியான அளவிற்கு வரிகளை விதித்து இருந்தது.
  • அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த டாக்டர் தடாங் மினு என்பவர் சர்வதேச குத்துச் சண்டை கூட்டமைப்பின் பயிற்சியாளர்கள் குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட அம்மாநிலத்தின் முதல் பெண் மற்றும் இரண்டாவது இந்தியப் பெண்மணி எனும் ஒரு பெருமையைப் பெற்றுள்ளார்.
    • குத்துச் சண்டை போட்டித் துறையில் அவர் பெற்றுள்ள மகத்தான அறிவு மற்றும் அனுபவத்தின் காரணமாக இவர் சர்வதேச குத்துச் சண்டை கூட்டமைப்பினால் நியமிக்கப் பட்டுள்ளார்.
  • சுதந்திரமான மற்றும் தடையில்லா இந்தோ பசிபிக் பகுதியினை உருவாக்குவதற்காக வேண்டி இந்தியக் கடற்படைக் கப்பல்களும் ஜப்பானியக் கடல்சார் தற்காப்புப் படையும் இந்தியப் பெருங்கடலில் ஒரு கூட்டு கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டன.
    • இந்தியப் பெருங்கடலில் JS காஷிமா (TV3508) மற்றும் செட்டோ யுகி (TV3518) ஆகியவை INS குலீஷ் என்ற கப்பலுடன் இணைந்து இருதரப்புப் பயிற்சியில் ஈடுபட்டன.
  • பாரதி ஏர்டெல் நிறுவனமும் டாடா குழுமமும் இணைந்து இந்தியாவில் 5G இணைப்பு சேவைகளை செயல்படுத்துவதற்கான உத்திசார் கூட்டிணைவினை அறிவித்துள்ளன.
    • இது 2022 ஆம் ஜனவரி முதல் வணிகரீதியிலான மேம்பாட்டிற்கு கிடைக்கப் பெறும்.
  • திரைப்படத் தயாரிப்பாளரும் எழுத்தாளருமான தஹிரா கஷ்யப் குர்ரானா என்பவர் “The 7 Sins of Being A Mother” எனும் தாய்மை குறித்த தனது நூலானது விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
    • கடந்த ஆண்டு “12 Commandments of Being A Woman” எனும் புத்தகத்தை இவர் வெளியிட்டார்.
  • உலக வனவிலங்கு நிதியமானது அப்போலோ மருத்துவமனையின் இயக்குநரான உபாசனா கமினேனி அவர்களைவன முன்களப் பணியாளர்களின் தூதராகநியமித்துள்ளது.
    • மருத்துவமனைகள் மற்றும் வனவிலங்குப் பாதுகாப்பு போன்ற துறைகளில் முன்களப் பணியாளர்களின் சேவைகளைப் பாராட்டும் நோக்கில் இந்த நியமனமானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • பிரித்தானிய வழக்கறிஞரான கரிம் கான் என்பவர் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் புதிய தலைமை வழக்கறிஞராகப் பொறுப்பேற்றுள்ளார்.
    • காம்பியாவின் ஃபடோவ் பென்சௌடா என்பவரின் 9 ஆண்டு கால பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து இவர் அப்பொறுப்பினை ஏற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்