TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 26 , 2021 1157 days 522 0
  • கொச்சின் சர்வதேச விமான நிலையமானது தனது விமான நிலையச் சேவையின்  தரத்திற்காக சர்வதேச விமான நிலைய மன்றத்தின் ‘ரோல் ஆஃப் எக்செலன்ஸ்’ எனும் கௌரவத்தைப் பெற்றுள்ளது.
    • பயணிகளின் கருத்தின் அடிப்படையில் தொடர்ந்து சிறப்பான சேவைகளை வழங்கி வரும் இந்த விமான நிலையத்திற்கு இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
  • ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்திய அணியின் அதிகாரப்பூர்வ கருத்துரு பாடல் ஆனது வெளியிடப் பட்டுள்ளது.
    • மோஹித் சவுகான் என்பவர் லக்சய தேரா சாம்னே ஹைஎன்ற இந்தப் பாடலை இயற்றிப் பாடியுள்ளார்.
  • உலக சுகாதார அமைப்பானது தென் ஆப்பிரிக்கா நாட்டில் கோவிட்-19 தடுப்பு மருந்துகளைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பப் பரிமாற்ற மையத்தினை அமைக்க உள்ளது.
    • இது எம்.ஆர்.என்.ஏ வகை தடுப்பு மருந்துகளைத் தயாரிப்பதற்கு வேண்டி ஆப்பிரிக்க நிறுவனங்களுக்கு உதவி வழங்கும்.
  • 2020 ஆம் ஆண்டில் ஐக்கிய ராஜ்ஜியத்திற்கான இரண்டாவது மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீட்டு மூலம் எனும் நிலையை இந்தியா தக்க வைத்துள்ளது.
    • அமெரிக்கா தனது முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்