TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 28 , 2021 1155 days 608 0
  • சித்திரவதைக்கு ஆளாக்கப் பட்டோருக்கான சர்வதேச ஆதரவு நாள் ஆனது ஒவ்வோர் ஆண்டும் ஜுன் 26 ஆம் நாளன்று ஐக்கிய நாடுகள் அமைப்பினால் கொண்டாடப் படுகிறது.
    • மனித சித்திரவதை என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல என்பதோடு மட்டுமல்லாமல் அது ஒரு குற்றம் என்பது பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினமானது கடைபிடிக்கப்படுகிறது.
  • டென்னிஸ் போட்டியின் தற்கால சகாப்தத்தில் விம்பிள்டன் மெயின் டிரா  (main draw) என்ற சுற்றில் பங்கேற்க உள்ள முதல் சீன விளையாட்டு வீரர் சாங்க் சிசேன் (Zhang Zhizhen) என்பவராவார்.
    • 24 வயதான சாங்க் உலகத் தரவரிசையில் 178வது இடத்தில் உள்ளார்.
  • டிரைடன் மின்சார வாகன உற்பத்தி நிறுவனமானது தெலுங்கானாவின் சாஹீராபாத்திலுள்ள தேசிய முதலீட்டு மற்றும் உற்பத்தி மண்டலத்தில் மின்சார வாகன உற்பத்தி அலகு (மையம்) ஒன்றினை நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளது.
    • டிரைடன் மின்சார வாகன உற்பத்தி நிறுவனமானது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மின்சார வாகன நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்