TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 29 , 2021 1154 days 502 0
  • கோவா மாநிலமானது ரேபிஸ் நோய் (வெறிநாய்க் கடி) அல்லாத முதல் இந்திய   மாநிலமாக உருவெடுத்துள்ளது.
    • கடந்த மூன்று ஆண்டுகளில் கோவா மாநிலத்தில் ஒரு ரேபிஸ் நோய் கூடப் பதிவாக வில்லை என அதன் முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.
  • சஜன் பிரகாஷ் நடைபெறவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தேர்வான முதல் இந்திய நீச்சல் வீரரானார்.
    • சஜன் ரோமில் நடைபெற்ற செட் கோலி கோப்பை (Sette Colli Trophy) போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த வாய்ப்பினைப் பெற்றார்.
  • மனு பக்கர் - சௌரப் சௌத்ரி அவர்கள் ஒசிசெக்கில் நடைபெற்ற 10மீ ஏர் பிஸ்டெல் துப்பாக்கிச் சுடுதலுக்கான கலப்பு அணிப் பிரிவுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
    • இது குரோசியாவின் ஒசிசெக் என்ற நகரில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவிற்கு கிடைத்த மூன்றாவது பதக்கமாகும்.
  • 2021 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஏற்றுமதி மையமாகத் திகழ்ந்த ஐக்கிய அரபு அமீரகத்தைப் பின்னுக்குத் தள்ளி சீனா அந்த இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
    • அமெரிக்காவானது இந்தியாவின் முன்னணி ஏற்றுமதிக் கூட்டிணைவு நாடாக திகழ்கிறது.
  • ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் மற்றும் கூகிள் கிளவுட் ஆகியவை இணைந்து விரிவான நீண்டகால உத்திசார் கூட்டிணைவினை மேற்கொள்கின்றன.
    • தேசிய அளவில் நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் சார்ந்த பிரிவுகளில் 5G இணைப்பினை இயங்கச் செய்யும் நோக்கில் இது மேற்கொள்ளப் படுகிறது.
  • ஊழல் தடுப்பு ஆணையரான சுரேஷ் N. படேல் அவர்கள் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தற்காலிக மத்திய ஊழல் தடுப்பு ஆணையராக செயல்படுவார்.
    • சஞ்சய் கோத்தாரி அவர்களின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து இந்த நியமனமானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்