TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 30 , 2021 1153 days 547 0
  • ஐரோப்பிய விண்வெளி நிறுவனமானது உலகில் முதல் முறையாக ஒரு மாற்றுத் திறனாளி விண்வெளி வீரரைப் பணியில் அமர்த்த உள்ளது.
  • பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரான இமானுவேல் கரேரே என்பவருக்கு இந்த ஆண்டு ஸ்பெயின் நாட்டின் உயரிய ஒரு விருதான ‘Princess of Asturias’ என்ற இலக்கிய விருதானது வழங்கப் பட்டுள்ளது.
    • இவர் உயரிய இலக்கியத் துறையில் கற்பனை சாராத வகைப் புத்தகங்களுக்குப் புகழ் பெற்றவராவார்.
  • ராகி சர்னோபத் குரேசியாவில் நடந்த ISSF துப்பாக்கிச் சுடுதலுக்கான உலகக் கோப்பைப் போட்டியின் மகளிர் 25 மீ பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டிப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
    • தற்போது நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இந்தியாவிற்குக் கிடைத்த முதல் தங்கப் பதக்கம் இதுவேயாகும்.
  • இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான சௌரவ் கங்குலி அவர்கள் T20 உலகக் கோப்பைப் போட்டியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப் படும் என அறிவித்தார்.
    • 2021 ஆம் ஆண்டிற்கான IPL போட்டிகளின் எஞ்சியுள்ள போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப் படும்.
  • ஐக்கிய நாடுகள்  அவையானது ஜுன் 29 ஆம் நாளினை சர்வதேச வெப்பமண்டல தினமாகக் கடைபிடிக்கிறது.
    • வெப்பமண்டலப் பகுதிகளின் அசாதாரண பன்முகத் தன்மையை கொண்டாடச் செய்வதோடு, வெப்ப மண்டல நாடுகள் எதிர்கொள்ளும் தனித்துவம் மிக்க சவால்கள் மற்றும் வாய்ப்புகளையும் இத்தினமானது குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • குருகிராமிலுள்ள ஃபோர்டிஸ் நினைவு ஆராய்ச்சி நிறுவனமானது பொது மக்களுக்கு ஸ்புட்நிக் V தடுப்பு மருந்தை வழங்குவதற்கான சோதனை ஓட்டத்தைத் தொடங்கி உள்ளது.
    • தற்போது நமது நாட்டில் கோவிசீல்ட், ஸ்புட்நிக் V மற்றும் கோவாக்சின் ஆகியவை தடுப்பு மருந்து வழங்கும் இயக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
  • 2021 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதியன்று தேசியக் காப்பீட்டு விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப் படுகிறது.
    • காப்பீட்டுச் சலுகைகள் மற்றும் வெவ்வேறு திட்டங்களைப் பற்றி மக்கள் மேலும் மேலும் அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்