TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 2 , 2021 1151 days 577 0
  • மத்திய அரசானது ஆத்ம நிர்பர் கிருஷிஎனும் செயலியைச் சமீபத்தில் வெளியிட்டு உள்ளது.
    • இந்தச் செயலியானது நடவடிக்கை எடுக்கத் தகுந்த வேளாண் சார்ந்த நுண்ணறிவினையும் (மண் வகை மற்றும் மண் வளம் போன்றவை) வானிலை முன்னெச்சரிக்கைகளையும் விவசாயிகளுக்கு வழங்குகிறது.
  • குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி அவர்கள் அகமதாபாத்தின் வத்வா GIDC (Gujarat Industrial Development Corporation) என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதலாவது ஃபென்டன் வகை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினைத் திறந்து வைத்தார்.
    • ஃபென்டன் வினையூக்க உலையானது பசுமை சுற்றுச்சூழல் சேவைக் கூட்டுறவுச் சமுதாயம் எனும் ஒரு நிறுவனத்தினால் அமைக்கப் பட்டதாகும்.
  • அன்சுலா ராவ் (மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டர்) ஊக்கமருந்து பரிசோதனையில் தேர்ச்சி பெறாததால் நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஆவார்.
    • தேசிய ஊக்க மருந்துத் தடுப்பு அமைப்பினால் இவருக்குத் தடை விதிக்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்