TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 8 , 2021 1145 days 601 0
  • ஹைதராபாத்தைச் சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான லாவ்ரஸ் ஆய்வகமானது 2-டி ஆக்சி–டி–குளுக்கோஸ் (2–DG) எனும் கோவிட்-19 மருந்தின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான உரிமத்தினைப் பெற்றுள்ளது.
    • லாவ்ரஸ் ஆய்வகத்திற்கான உரிமமானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினால் வழங்கப் பட்டுள்ளது.
  • பனாசியா பயோடெக் என்ற நிறுவனமானது இமாச்சலப் பிரதேசத்திலுள்ள பாடியில் (Baddi) அமைந்துள்ள தனது மையத்தில் ஸ்புட்நிக் V கோவிட்-19 தடுப்பு மருந்தினைத் தயாரிப்பதற்கு வேண்டி இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு வாரியத்திடம்  இருந்து உரிமத்தினைப் பெற்றுள்ளது.
    • புதுடெல்லியில் அமைந்துள்ள பனாசியா பயோடெக் நிறுவனமானது ரஷ்ய நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்துச் செயலாற்றுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்