TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 10 , 2021 1143 days 526 0
  • மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காதி பிரக்ரித் பெயிண்ட்என்று பெயரிடப்பட்ட இந்தியாவிலேயே முதன்முறையாக மாட்டுச் சாணத்திலிருந்துத் தயாரிக்கப்பட்ட பெயிண்ட் (பூச்சு) வகையை காணொலி மூலம் வெளியிட்டார்.
    • மேலும், இந்தப் பூச்சு வகை பற்றி நாடு முழுவதும் அறியச் செய்வதற்காக தன்னை அந்தப் பூச்சு வகையின் விளம்பரத் தூதராகவும் அறிவித்தார்.
  • இம்பால் மற்றும் அகர்தலா ஆகிய வடகிழக்கு மாநிலப் பகுதிகளில் மேலும் இரு சர்வதேச விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
    • அப்பகுதியில் போக்குவரத்து இணைப்பினை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த முடிவானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • இங்கிலாந்தில் விதிக்கப்பட்டிருந்த முகக்கவசம் அணிதல், சமூக விலகல் மற்றும் வீட்டிலிருந்தே பணிபுரிதல் உள்ளிட்ட கோவிட்-19 ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் 2021 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதியோடு முடிவடைகிறது.
    • பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களின் சமீபத்திய அறிவிப்பில் இது தெரிவிக்கப் பட்டுள்ளது.
  • இந்திய இராணுவமானது ‘12 குறுகிய நெடுக்கமுடைய இணைப்பு அமைப்பு -10 மீ‘ என்பதின் முதலாவது உற்பத்தித் தளத்தினை அமைத்துள்ளது.
    • இது லார்சன் & டூப்ரோ லிமிடெட் என்ற நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப் பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்