TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 29 , 2018 2404 days 855 0
  • இலண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் அரசுத் தலைவர்கள் சந்திப்பின் (Commonwealth Heads of Government Meeting-CHOGM) இறுதியில் காமன்வெல்த் நாடுகள் 2020-ல் இணைய பாதுகாப்பு மீது செயல் நடவடிக்கைகளை மேற்கொள்ள காமன்வெல்த் சைபர் பிரகடனத்தை (Commonwealth Cyber Declaration) இயற்றியுள்ளன. இந்தப் பிரகடனமானது சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்பின் மீதான உலகின் மிகப்பெரிய மற்றும் புவியியல் ரீதியில் மிகவும் பன்மைத்துவமுடைய உலகின் பல்வேறு அரசுகளுக்கிடையேயான அர்ப்பணிப்பாக (inter-governmental commitment) கருதப்படுகின்றது.
  • சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் (Sichuan province) ஆராய்ச்சியாளர்கள்15 செ.மீ. அளவில் இறக்கையைக் (wingspan) கொண்ட மிகப்பெரிய கொசுவை கண்டுபிடித்துள்ளனர். இது உலகின் மிகப்பெரிய கொசு இனமான ஹோலோருசியாமிகடோ (Holorusiamikado) இனத்தைச் சேர்ந்தது. இந்த கொசு இனமானது முதன்முதலில் ஜப்பானில் கண்டறியப்பட்டது. பொதுவாக இவை 8 செ.மீ. வரை இறக்கை அளவை கொண்டவை. இந்த கொசுக்கள் தாவரங்களின் தேன்களை (nectar) முக்கிய உணவாக உட்கொள்பவை. இவை இரத்தத்தை உறிஞ்சுவன அல்ல.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்