TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 20 , 2021 1133 days 546 0
  • நேச்சர் எனும் அறிவியல் இதழில் வெளியான சில தகவல்களின்படி. அமேசான் மழைக் காடுகளின் சில பகுதிகளிலுள்ள மரங்கள், தான் உறிஞ்சும்  கார்பன் டை ஆக்சைடை விட அதிக அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றன.
    • ஒரு கார்பன் ஈர்ப்புப் பகுதியாக (கார்பன் மடு) அமேசான் மழைக்காடுகளின் பங்கு குறைந்து வருவது இதன் மூலம் தெரிய வருகிறது.
  • கர்நாடக முதலமைச்சர் B.S. எடியூரப்பா கர்நாடக மின்சார இருசக்கர வாகன வாடகைத் திட்டம் 2021 என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
    • பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோ நிலையங்களை அடைவதில் உள்ள சிரமங்களைக் குறைத்தல் மற்றும் அதற்கான பயண நேரத்தைக் குறைத்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய ஒன்றியப் பிரதேசங்களுக்கான பொது உயர் நீதிமன்றம்என்ற பெயரானதுஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றம்என மாற்றப் பட்டுள்ளது.
    • இதற்கான ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு (சிரமங்களை நீக்குதல்) ஆணை, 2021 என்ற ஒரு ஆணையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் கையெழுத்திட்டார்.
  • ஆசிய-பசிபிக் வர்த்தகக் குழுமத்தின் ஒரு சிறப்பு காணொலிச் சந்திப்பானஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்புஎனும் சந்திப்பிற்கு நியூசிலாந்து நாடு தலைமை ஏற்றது.
    • இந்த சந்திப்பின் போது, விரிவான கோவிட்-19 நோய்த் தடுப்பு என்பது உலகளவில் மக்களுக்கான ஒரு நன்மை என்றும் இந்த சுகாதார நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு வருவதற்குத் தடுப்பு மருந்துகளை விரைவாக அணுகச் செய்வது  மிக அவசியம் என்றும் உலகத் தலைவர்கள் அனைவரும் குறிப்பிட்டுக் கூறினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்