TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 1 , 2018 2271 days 748 0
  • ஷாங்காய் கூட்டுறவு நிறுவத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சீனாவிற்கு சென்றுள்ளார். கடந்த மாதம் திரு. வாங் சீனாவின் கவுன்சிலராக பதவி உயர்வு பெற்ற பிறகு நடைபெறும் முதல் மாநாடு இதுவேயாகும். இப்பதவி உயர்வு, சீன அரசு அதிகாரப் பதவிப் படிநிலைகளில் நாட்டின் உயர் தூதரக அதிகாரியாக வாங்கை உருவாக்கியுள்ளது. இவர் வெளியுறவு அமைச்சராகவும் தனது பதவியைத் தொடர்வார்.
  • துருக்கி குடியரசிற்கான இந்தியாவின் தற்போதைய தூதரான திரு.இராகுல் குல்ஸ்ரேஸ்த், எகிப்து அரபுக் குடியரசிற்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • எகிப்து அரபுக் குடியரசிற்கான இந்தியாவின் தற்போதைய தூதரான திரு. சஞ்சய் பட்டாச்சார்யா துருக்கி குடியரசிற்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தற்போது பனாமாவிற்கான இந்திய தூதராக பணியாற்றி வரும் திரு. இரவி தாப்பர் (IFS : 1983) நிகரகுவாவிற்கான அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இரு பணியையும் ஒருசேர மேற்கொள்வார்.
  • நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப அவுட்சோர்சிங் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் $100 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மூலதனத்தை அடைந்த முதல் இந்திய நிறுவனமாக உருவெடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. சந்தை மூலதன மதிப்பு என்பது நிறுவனங்களின் மதிப்பு ஆகும். இந்த மதிப்பு ஆனது, பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. தற்போதைய பங்குகளின் விலைப்படி மொத்த பங்குகளை பெருக்கி இந்த மதிப்பு கணக்கிடப்படுகிறது.
  • மகாத்மா காந்தியின் 1917ஆம் ஆண்டின் சம்பாரான் இயக்கத்தின் அடிப்படையில் பீகார் முதலமைச்சர் நிதிஸ் குமார் மூன்று புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

அவையாவன:

புத்தகங்கள் எழுதியவர்கள்
`மிஸ்டர் M.K.காந்தி கி சம்பாரன் டைரி’ அரவிந்த் மோகன்
`சம்பாரன் அந்தோலன் 1917’ அசுடோஷ் பர்தேஷ்வர்
`பீர் முகம்மது முனிஸ்: கலம்காசத்யாகிரகி’ ஸ்ரீகாந்த்
  • எகிப்து வீரரான முகம்மது சாலாஹ், லிவர் பூலில் நடைபெற்ற தன்னுடைய முதல் போட்டியில் சிறப்பாக விளையாடியமைக்காக மத்திய லண்டனிலுள்ள குரோஸ் வெனோர் ஹவுஸ் ஹோட்டலில் நடைபெற்ற 45-வது PFA விருது வழங்கும் விழாவில் இந்த ஆண்டிற்கான தொழில்முறை கால்பந்து வீரர்கள் கூட்டமைப்பு வீரர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அயன் ரூசுக்குப் பிறகு 40 கோல்களை ஒரே தொடரில் அடித்த முதல் லிவர் பூல் வீரரான இவர், பிரிமீயர் லீக் கால்பந்துப் போட்டியில் லூயி சர்வேஷ் அடித்த 31 கோல்கள் என்ற சாதனையை வீழ்த்திய   பெருமையையும் பெற்றுள்ளார்.
  • நாட்டுடைமை வர்த்தக நிறுவனமான MMTC மூலமாக +64% Fe தரத்திலான இரும்புத் தாதுக்களை (திரட்டுக்கள்) ஜப்பான் மற்றும் தென்கொரியாவிற்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கு மத்திய கேபினெட் அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்