TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 24 , 2021 1129 days 515 0
  • சுவிட்சர்லாந்தின் லாவ்சேன் என்னுமிடத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சர்வதேச ஒலிம்பிக் குழுவானது  தனது முழக்கத்தை ‘Faster, Higher, Stronger-Together’ என மாற்றியுள்ளது.
    • 1894 ஆம் ஆண்டு முதல் ‘Faster, Highter, Stronger’ என்பதே ஒலிம்பிக் போட்டிகளின் முழக்கமாக இருந்து வந்தது.
  • அஸ்ஸாம் மாநில முதல்வர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற அசாமின் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் மாநில அரசு வேலை வழங்கப் போவதாக உறுதியளித்துள்ளார்.
  • வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ், ஹைதராபாத்தில் ஒரு புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது.
    • வங்கி மற்றும் நிதிச் சேவைக்கான முக்கிய முதலீட்டு மையமாக ஹைதராபாத் வளர்ந்து வருகிறது.
  • கூகுள் இந்திய நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சஞ்சய் குப்தா 2021-23 ஆம் காலகட்டத்திற்கான இந்திய இணையதளம் மற்றும் அலைபேசி கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டதாக இந்திய இணையதளம் மற்றும் அலைபேசி கழகம் தெரிவித்துள்ளது.
    • அமேசான் இந்திய நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரும், இந்திய நாட்டு மேலாளருமான அமித் அகர்வாலுக்குப் பின் அவர் இந்தப் பதவியை ஏற்கிறார்.
  • மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர்.கே. சிங் அவர்கள், BEE என்ற (Bureau of Energy Efficiency) எரிசக்திப் பாதுகாப்புக் கட்டிடக் குறியீடுகளுக்குக் இணங்க கட்டப்பட்ட கட்டிட வடிவமைப்புகளை ஊக்குவிக்கச் செய்வதற்காக NEERMAN விருதுகள் என்ற பெயரில் ஒரு முன்முயற்சியைத் தொடங்கி வைத்துள்ளார்.
    • NEERMAN ஆனது 'National Energy Efficiency Roadmap for Movement towards Affordable & Natural Habitat' என்பதைக் குறிக்கிறது.
  • கொல்லம் மாவட்டத்தில் உள்ள பெரும்குளத்திற்கு கேரளாவின் முதல் ‘புத்தகக் கிராமம்’ என்ற அடைமொழி வழங்கப் பட்டுள்ளது.
  • உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆறு நதிகள் புத்துயிர் பெறுவதற்காக வேண்டி சில புதிய திட்டங்களுக்கு தேசிய கங்கை நதி மீதான தூய்மைத் திட்டமானது ஒப்புதல் அளித்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்