TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 25 , 2021 1128 days 529 0
  • ஜூலை 22 அன்று உலக நலிந்த X குரோமோசோம் நோய் விழிப்புணர்வுத் தினமானது கடைபிடிக்கப்பட்டது.
    • இந்த நாளில் உலகின் வெவ்வேறு சமுதாயத்தினரால் உலகின் முக்கிய இடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் ஆகியவை ஒளி விளக்குகளால் ஒளிரூட்டப்படும்.
  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் செயலாளர் அரமானே கிரிதர் (இந்திய ஆட்சிப்பணி அதிகாரி) அவர்களிடம் இந்திய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் பொறுப்பானது கூடுதல் பொறுப்பாக வழங்கப் பட்டுள்ளது.
  • பல்கலைக்கழக சேர்க்கைகளில் திருநங்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வயது வரம்பினை கேரள அரசு நீக்கியுள்ளது.
    • 2015 ஆம் ஆண்டில் திருநங்கைகளுக்கான கல்விக் கொள்கையை அறிவித்த முதல் இந்திய மாநிலம் கேரளாவாகும்.
  • லடாக்கில் ஒரு மத்தியப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • நிதி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ரஷ்மி ரஞ்சன் தாஸ், ஐ.நா.வின் வரிக் குழுவிற்கு வேண்டி 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 வரித்துறை நிபுணர்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • அதிபர் ஜோவெனல் மோயிஸ் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹைத்தி நாட்டில் நிலவி வரும் அரசியல் கிளர்ச்சிக்கு மத்தியில் ஹைத்தியின் புதியப் பிரதமராக ஏரியல் ஹென்றி (Ariel Henry) பொறுப்பேற்றுள்ளார்.
  • சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தில் 1000 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிக மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது. 
    • செங்க்சூவா நகரில் மூன்று நாட்களில் மட்டும் 617.1 மி.மீ. அளவிற்கு மழைப் பொழிவானது பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்