TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 26 , 2021 1127 days 502 0
  • இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் M. வெங்கையா நாயுடு அவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யலமஞ்சிலி சிவாஜி என்பவர் எழுதிய பல்லேகு பட்டாபிசேகம்எனும் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.
    • இந்தப் புத்தகமானது இந்தியக் கிராமப் பகுதிகள் மற்றும் வேளாண்மையை அடிப்படையாகக்  கொண்டு எழுதப் பட்டதாகும்.
  • திரைப்பட இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மேஹ்ரா தனது சுயசரிதையான “The Stranger in the Mirror” எனும் புத்தகத்தைப் பற்றி அறிவித்துள்ளார்.
    • புகழ்பெற்ற எழுத்தாளர் ரீட்டா ராமமூர்த்தி குப்தா என்பவருடன் இணைந்து இவர் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
  • இந்தியக் கடற்படையானது பணியிலுள்ள மற்றும் ஓய்வு பெற்ற தனது அனைத்துப் பணியாளர்களின் சம்பளக் கணக்கு வைப்பிற்காக கோடக் மஹிந்திரா வங்கியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
  • G20 நாடுகளின் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் இத்தாலி நாட்டின் தலைமையின் கீழ் நேபிள்ஸ் எனுமிடத்தில் நடைபெற்ற ஒரு பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
  • லடாக் ஒன்றியப் பிரதேசத்திற்காக வேண்டி ஒரு ஒருங்கிணைந்த பல்பயன்பாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தை நிறுவுவதற்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
    • இந்தக் கழகமானது தொழில்துறை, சுற்றுலா, போக்குவரத்து மற்றும் உள்ளூர் தயாரிப்புப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களின் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றிற்காகப் பணியாற்றும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்