TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 27 , 2021 1126 days 621 0
  • ஐக்கிய ராஜ்ஜியமானது தனது நாட்டில் நோரோவைரஸ் பெருந்தொற்று ஏற்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
    • நோரோ வைரசினால் பாதிக்கப்பட்ட மக்கள் பில்லியன் கணக்கான வைரஸ் துகள்களைப் பரவச் செய்து இதனை ஒரு பெருந்தொற்றாக மாற்றக் கூடும்.
  • இந்திய தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணியின் முன்கள வீரர் நங்கங்கோம் பாலா தேவி, 2020-21 ஆம் ஆண்டிற்கான அனைத்திந்தியக் கால்பந்தாட்ட கூட்டமைப்பின் சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனை என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளார்.
    • இவர் தற்போது, ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் மகளிர் போட்டியில் ரேஞ்சர்ஸ் உமென் என்ற அணிக்காக (Rangers Women’s) விளையாடி வருகிறார்.
  • இந்தியக் கால்பந்து அணியின் மூத்த இந்தியத் தடுப்பாட்ட நிலை வீரர் (எதிரணி கோல்களை தடுக்கும் வீரர்) சந்தேஷ் ஜிங்கான் 2021-21 ஆம் ஆண்டிற்கான அனைத்திந்தியக் கால்பந்தாட்ட கூட்டமைப்பின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
    • இந்தியாவின் ஒரு  மூத்த மத்தியத் தடுப்பாட்ட வீரர் ஒருவர் AIFF அமைப்பினுடைய ஆண்டின் சிறந்தக் கால்பந்தாட்ட வீரர் எனும் பட்டத்தினை பெறுவது இதுவே முதன்முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்