TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 3 , 2018 2400 days 853 0
  • விதைகள் மற்றும் நடவுப் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு வசதி ஏற்படுத்தித் தரும் நோக்கில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகம் ஏற்றுமதி-இறக்குமதி இணைய வாயிலைத் தொடங்கியுள்ளது. விதைகள் மற்றும் நடவுப் பொருட்களின் ஏற்றுமதியானது 2002 – 2007 ஆம் ஆண்டின் ஏற்றுமதிக் கொள்கையால் கட்டுப்படுத்தப்படும்.
  • பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் இடையேயான  முதல் முறைசாரா சந்திப்பு உஹானில் நடந்தது.
  • உலகளாவிய வியத்தகு இந்தியா என்ற சுற்றுலாப் பிரச்சாரத்திற்காக மத்திய சுற்றுலாத் துறையுடன் கூட்டிணைந்து கூகுளின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு 360º மெய்நிகர் உண்மை காணொலியை ஆரம்பித்துள்ளது. இந்த காணொலி டெல்லியின் குதுப்மினார், ஹம்பியின் வித்தாலா கோயில்கள், அமிர்தசரஸின் பொற்கோயில் மற்றும் கோவாவின் ஈஸி கோயிங் வைப் உள்ளிட்ட சில மிக முக்கியமான மக்கள் செல்லும் பாரம்பரிய இடங்களை 360º அளவில்  காட்சிப்படுத்தும்.
    • இந்த காணொலியானது கூகுளின் இ ஹலோ கேமரா உள்பட சிறந்த 360º காணொலி படப்பிடிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது.
  • உட்சேர்ப்புத் திட்டத்திற்கு இந்தியாவில் புத்தாக்கல் என்பதற்காக 125 அமெரிக்க டாலரை மறுகட்டுமானம் மற்றும் மேம்பாட்டிற்கான சர்வதேச வங்கியிடமிருந்து  கடன் பெறுவதற்காக மத்திய அரசு (நிதி அமைச்சகம்) உலக வங்கியுடன் ஒரு கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவிலுள்ள உயிரி மருந்துப் பொருள் மற்றும் மருத்துவ கருவிகள் தொழிலகம் ஆகியவற்றில் உள்நாட்டு புத்தாக்கத்தை ஊக்குவித்தல், சாதாரண உற்பத்திப் பொருள் மேம்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் வணிக செயல்பாட்டை அதிகரித்தல் ஆகியவற்றை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
    • இந்தத் திட்டம் ஜூன் 2023 உடன் முடிவடையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்