TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 3 , 2021 1119 days 572 0
  • சர்வதேச நாணய நிதியமானது, கோவிட் – 19 பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக 2021 – 22 ஆம் நிதி ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மீதான வளர்ச்சியினை 9.5% ஆக கணித்துள்ளது.
    • இதற்கு முன்பாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 12.5% ஆக கணிக்கப் பட்டிருந்தது. 
  • பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின், கீழ் இயங்கும் இராணுவ உற்பத்தித் துறையானதுசிறப்பான இராணுவ அமைப்பிற்கான புதிய கண்டுபிடிப்புகள்’ (Innovations for Defence Excellence (iDEX)) எனும் மத்திய அரசின் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • சுமார் 300 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் புதுமைப் படைப்பாளர்களுக்கும், சுமார் 20 பங்குதாரர் புத்தாக்க நிறுவன அமைப்புகளுக்கும் பாதுகாப்பு புதுமை கண்டுபிடிப்பு அமைப்பின் மூலம் வேண்டிய நிதி உதவியை வழங்குவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
  • ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவற்றையடுத்து அதிக அந்நியச் செலாவணி இருப்புகளைக் கொண்டுள்ள நாடாக தற்போது சீனா திகழ்கிறது.
    • இந்தியா அதிக அந்நியச் செலாவணி இருப்புகளுடன் ரஷ்யாவைப் பின்னுக்குத் தள்ளி நான்காம் இடத்தினைப் பெற்றுள்ளது.
  • திவ்யா நயன் (Divya Nayan) என்ற பெயரில் பார்வையற்றோருக்கான தனிப்பட்ட வாசிப்புக் கருவியை சண்டிகரிலுள்ள சிஎஸ்ஐஆர்-மத்திய அறிவியல் கருவிகள் நிறுவனம் (CSIR-Central Scientific Instruments Organisation (CSIO)) உருவாக்கியுள்ளது.
    • இந்தக் கருவியைப் பயன்படுத்தி, எந்த அச்சிடப்பட்ட அல்லது டிஜிட்டல் ஆவணத்தையும் குரல் வழியாக அணுகலாம்.
  • 2021 ஆம் நிதியாண்டில் கடன்களைத் தள்ளுபடி செய்த பொதுத்துறை வங்கிகளின் பட்டியலில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (State Bank of India) முதலிடத்தில் உள்ளது.
    • இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்