TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 4 , 2021 1118 days 538 0
  • BRICS நாடுகளின் தீவிரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பினை வலுப்படுத்துவதற்காக வேண்டி BRICS தீவிரவாத எதிர்ப்புச் செயல்திட்டமானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • இது குறித்த ஒரு விவாதமானது BRICS அமைப்பின் தீவிரவாத எதிர்ப்புச் செயற் குழுவின் 6வது சந்திப்பில் நடைபெற்றது.
  • மியான்மர் நாட்டு இராணுவமானது அவசர நிலையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
    • இராணுவ அரசானது தன்னை தற்காலிக அரசுஎனப் பெயரிட்டு மின் ஆங்க் ஹலாய்ங் என்பவரைப் பிரதமராக நியமித்துள்ளது.
  • அசாம் மற்றும் மிசோரம் ஆகிய மாநில முதல்வர்கள் தங்களது மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் நிலவும்  பதற்றமான ஒரு சூழ்நிலையைக் குறைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
    • இந்த இரு மாநிலங்களும் 164.6 கி.மீ. தொலைவிலான பதற்றம் மிக்க எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்