TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 5 , 2021 1117 days 516 0
  • அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி வழங்கிய (100%) முதல் இந்திய நகரமாக புவனேஷ்வர் உருவெடுத்துள்ளது.
    • 55 மையங்களில் எல்லா நேரங்களிலும் தடுப்பூசி சேவையை வழங்கி வரும் புவனேஷ்வர் மாநகராட்சிக் கழகத்திற்கு இப்பெருமை சேரும்.
  • நேஷனல் ஜியோகிராஃபிக் எனும் தொலைக்காட்சி நிறுவனமானது துபாயின் ‘Museum of the Future’ எனும் ஒரு அருங்காட்சியகத்தினை உலகின் மிக அழகான அருங்காட்சியகங்களுள் ஒன்றாக பட்டியலிட்டுள்ளது.
    • அதனுடைய கட்டிடக்கலை மற்றும் அதிநவீன தொழில்நுட்பப் புதுமைக்காக வேண்டி இந்த அங்கீகாரமானது வழங்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி ஆகியோர், 2021 ஆம் ஆண்டின் இறுதியில் ஈராக்கில் மேற்கொள்ளப் படும், அமெரிக்கப் போர் பணியை முறைப்படி நிறுத்துவதற்கான ஒப்பந்தம் குறித்து அறிவித்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்