TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 8 , 2021 1114 days 639 0
  • இந்திய அரசு, மத்திய நீர் வள ஆணையம், 10 பங்கேற்பு மாநிலங்களின் அரசுப் பிரதிநிதிகள் மற்றும் உலக வங்கி ஆகியவை இணைந்து நீண்ட கால அளவிலான அணைப் பாதுகாப்புத் திட்டத்திற்கான ஒரு செயல்திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன.
    • இந்தியாவின்  பல்வேறு மாநிலங்களிலுள்ள அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதில் இந்தச் செயல்திட்டம் உதவும்.
  • ஆக்சிஸ் வங்கியானது தனது வாட்ஸ்அப் வழி வங்கிச் சேவையில் ஒரு மில்லியன் என்பதிற்கும் மேலான வாடிக்கையாளர்களைப் பெற்று ஒரு புதிய மைல்கல்லை கடந்துள்ளது.
    • 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆக்சிஸ் வங்கியானது வாட்ஸ் அப் தளத்தில் தனது வங்கிச் சேவையை அறிமுகப்படுத்தியது.
  • இந்திய ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய ஹைட்ரஜன் உற்பத்தி வழிமுறையை வெளிக் கொணர்ந்துள்ளனர்.
    • வெளிப்புறக் காந்தப்புலத்தின் முன்னிலையில் (magneto-electrocatalysis) மேற் கொள்ளப்படும் நீர் மின்னாற்பகுப்பு மூலம் ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதே இந்தப் புதிய வழிமுறையாகும்.
  • இந்திய ஹாக்கி மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்ஜோர்ட் மரிஜ்னே (Sjoerd Marijne) தனது பதவியில் இருந்து விலகி உள்ளார்.
    • டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கான பிரிட்டன் அணிக்கு எதிரான இந்திய அணியின் போட்டி தான் இந்திய அணியுடனான தனது கடைசிப் பணி என்று அவர் தெரிவித்து உள்ளார்.
  • வந்தனா கட்டாரியா ஒலிம்பிக் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் இந்திய ஹாக்கி வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
    • டோக்கியோவிலுள்ள ஓய் ஹாக்கி அரங்கில் நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியினை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்ற போட்டியில் இச்சாதனையானது நிகழ்த்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்