TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 9 , 2021 1113 days 588 0
  • அத்தியாவசியப் பாதுகாப்பு (இராணுவ) சேவைகளில் ஈடுபடும் உற்பத்தி அலகுகளில் போராட்டங்கள், பணிமனை அடைப்பு மற்றும் வேலை நிறுத்தம் போன்றவற்றை தடை செய்வதற்கு மத்திய அரசிற்கு அதிகாரம் அளிக்கும் ஒரு மசோதாவினைப் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
    • இராணுவத்திற்குத் தேவைப்படும் பொருட்கள் (அ) உபகரணங்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள உற்பத்தி அலகுகள் (அ) துறைகளே அத்தியாவசிய இராணுவச் சேவைகள் ஆகும்.
  • ரஷ்ய நாட்டு ஆய்வுப் பெட்டகமான நவ்கா அதன் இலக்குடன் இணைக்கப் பட்டதை அடுத்து சர்வதேச விண்வெளி நிலையம் தனது பயணத்தை நிறுத்தியுள்ளது.
    • நவ்கா என்பது ரஷ்ய நாட்டின் ராஸ்கோஸ்மாஸ் என்ற நிறுவனத்தின்   நிதியுதவியுடன் உருவாக்கப் பட்ட சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஒரு பல்பயன்பாட்டு ஆய்வகப் பெட்டகம் ஆகும்.
  • G20 நாடுகளின் கலாச்சார அமைச்சர்களின் முதல் சந்திப்பானது இத்தாலியிலுள்ள ரோம் நகரில் நடத்தப் பட்டது.
    • கலோசியம் மற்றும் பெலாசோ பார்பெரினி ஆகியவை G20 மாநாட்டை ரோமில் நடத்தின.
  • C.A. பவானி தேவி ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பங்கேற்கும் முதல் இந்திய வாள்வீச்சு வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
    • பவானி சென்னையில் பிறந்தவராவார்.
  • ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 04 ஆம் தேதி அன்று தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினமானது அனுசரிக்கப் படுகிறது.
    • இத்தினமானது எலும்பு மூட்டுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது குறித்த அவசியம் பற்றி விழிப்புணர்வைப் பரப்புகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்