TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 10 , 2021 1112 days 563 0
  • தமிழ்நாட்டில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டிற்கான  பாரத் கேசரி டங்கல் என்ற மல்யுத்தப் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் லபான்சு சர்மா வெற்றி பெற்றுள்ளார்.
    • உத்தரகாண்ட் மாநிலம் உருவான 20 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவரை நிலவிய நீண்டகால இடைவெளியை உடைத்து அந்த மாநிலத்திற்கான பாரத் கேசரி என்ற பட்டத்தினை இவர் வென்றுள்ளார்.
  • லடாக் ஒன்றியப் பிரதேசத்தில் ஒரு மத்தியப் பல்கலைக்கழகத்தை (சிந்து மத்தியப் பல்கலைக் கழகம்) நிறுவுவதற்கான மசோதாவானது மக்களவையில் நிறைவேற்றப் பட்டது.
    • லே மற்றும் கார்கில் உள்ளிட்ட லடாக்கின் அனைத்துப் பகுதிகளின் கல்வித் தேவையையும் இந்தப் பல்கலைக் கழகம் பூர்த்தி செய்யும்.
  • சர்வதேச மன்னிப்பு தினமானது நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் மன்னிப்பு கோரச் செய்வதையும் மன்னிப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.
    • ஆகஸ்ட் மாதத்தின் முதலாவது ஞாயிறன்று (01-08-2021) உலகம் முழுவதும் சர்வதேச மன்னிப்பு தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • சமீபத்தில், தமிழ்நாடு பாடத்திட்ட அறிவுரைக் குழுவின் ஒரு உறுப்பினராக சுப. வீர பாண்டியனை நியமித்து  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்