TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 12 , 2021 1110 days 535 0
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் முதலாவது இணைய ஆளுகை மன்றமானது (Internet Governance Forum) நடத்தப் படும் என அறிவித்துள்ளது.
    • இம்மன்றமானது டிஜிட்டல் இந்தியாவிற்கான உள்ளார்ந்த இணையம்எனும் ஒரு கருத்துருவுடன் நடத்தப்படும்.
  • 2020 ஆம் ஆண்டில் தேசியக் கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவது தொடர்பான  ஒரு ஆணையை வெளியிட்ட இந்தியாவின் முதல் மாநிலமாக கர்நாடகா மாறி உள்ளது.
    • இக்கொள்கையானது தற்போதைய கல்வியாண்டு (2021-22) முதல் நடைமுறைக்கு வரும்.
  • நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது இந்திய அமைச்சரவைச்  செயலாளரான ராஜீவ் கௌபாவின் பணிக் காலத்தினை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டித்துள்ளது.
    • இவரின் பதவிக் காலம் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதியோடு நிறைவடைய இருந்தது.
  • நெகிழிகளால் ஆன தேசியக் கொடிகளை மக்கள் பயன்படுத்தாது இருப்பதை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேச அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
    • சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்த அறிவிப்பானது வெளியிடப் பட்டுள்ளது.
  • பாரதிய உத்யோக் வியாபார் மண்டல் அமைப்பின் நிறுவன தினத்தின் நினைவாக ஆகஸ்ட் 09 ஆம் தேதியானது இந்தியாவில் தேசிய வார்த்தகர்கள் தினமாக அனுசரிக்கப் படுகின்றது.
    • இத்தினத்தையொட்டி மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வர்த்தகர்களிடையே உரையாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்