TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 13 , 2021 1109 days 580 0
  • டிஜிட்டல் வங்கி மோசடிகள் குறித்து மக்களை எச்சரிப்பதற்காக வேண்டி, பொது விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஒன்றினை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.
    • இந்த புதியப் பிரச்சாரத்திற்காக ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவினை இந்திய ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது.
  • முதலாவது வன்தன் வருடாந்திர விருது விழாவில் (2020-21) நாகாலாந்து மாநிலத்திற்கு ஏழு தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
    • இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு நிறுவனத்தின் 34வது நிறுவனத் தினத்தின் கொண்டாட்டத்தின் போது இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
  • கிரேக்கத்தின் இரண்டாவது மிகப்பெரிய தீவான ஈவியா என்ற தீவின்  வடக்கு முனையில் பெரிய அளவில் காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து கொண்டே உள்ளது.
    • காட்டுத்தீ என்பது காடுகள், புல்வெளிகள் போன்ற இயற்கையான நிலப் பரப்புகளில் எதிர்பாராத விதமாக ஏற்படும் தீ விபத்து ஆகும்.
  • கோவாக்சின் தடுப்பு மருந்தினை உற்பத்தி செய்வதற்காக, தெற்கு குஜராத்திலுள்ள அங்கலேஷ்வர் என்னுமிடத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் உற்பத்தி மையத்தினை நிறுவுவதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
    • கோவாக்சின் என்பது இந்திய நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் கோவிட்-19 தடுப்பு மருந்தாகும்.
  • 75வது சுதந்திர தினத்தின் கருத்துரு, “Nation First Always First” என்பதாகும்.
    • இந்த ஆண்டு நாட்டின் 75வது சுதந்திர தினமானது செங்கோட்டையில் கொண்டாடப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்