TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 4 , 2021 1087 days 621 0
  • விளாடிவோஸ்டாக் எனுமிடத்தில் நடைபெற உள்ள 6வது கிழக்கத்தியப் பொருளாதார மன்ற உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா செல்லும் அரசுமுறை மற்றும் வணிகப் பிரதிநிதிகளைப் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீர் சிங் பூரி தலைமையேற்று வழி நடத்துவார்.
    • ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அவர்களும் பங்கேற்க உள்ள இந்த கிழக்கத்தியப் பொருளாதார மன்றத்தின் முழுநீள மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொலி வாயிலாக கலந்து கொள்வார்.
  • டோக்கியோ பாராலிம்பிக்ஸ் 2020 போட்டிகளின் ஆடவர் உயரம் தாண்டுதல் T63 போட்டியில் சரத் குமார் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
    • இவர் பீகாரின் முசாஃபர்பூரில் பிறந்தவராவார்.
  • 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 முதல் கோவா மாநிலம் தனது குடிமக்களுக்கு 16,000 லிட்டர் வரை இலவசமாக தண்ணீர் வழங்கும் இந்தியாவின் முதல் மாநிலமாக மாறியுள்ளது.
    • இதுஇலவச தண்ணீரைப் பெற தண்ணீரைச் சேமியுங்கள்’ (Save Water to Get Free Water’) என்ற திட்டத்தின் கீழ் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • செக் குடியரசிலுள்ள ஓலோமக் என்ற இடத்தில் நடைபெற்ற செக் சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் உக்ரைனைச்  சேர்ந்த யெவ்ஹென் ரிஷ்சேபா என்ற வீரரை (Yevhen Ryshchepa) தோற்கடித்து இந்தியாவின் முன்னணி டேபிள் டென்னிஸ் வீரர் G. சத்தியன் வெற்றி பெற்றுள்ளார்.
    • இது 2016 ஆம் ஆண்டு பெல்ஜியம் ஓபன் மற்றும் 2017 ஆம் ஆண்டு ஸ்பானிஸ் ஓபன் ஆகிய போட்டிகளில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து ITTF சேலஞ்சர் போட்டியில் பெற்ற இவரது 3வது வெற்றியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்