TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 8 , 2021 1083 days 553 0
  • சட்டமன்ற உறுப்பினர்/பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக பதிவாகியுள்ள குற்றவியல் வழக்குகளை திரும்பப் பெறும் முன், அது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் அனுமதியை அரசு பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
  • சமீபத்தில் ஹங்கேரியின் புதாபெஸ்டில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு உலக டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் வளர்ந்து வரும் இணை வீரர்களான G. சத்தியன் மற்றும் மணிகா பத்ரா ஆகியோர் கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டத்தை வென்று உள்ளனர்.  
  • சீனா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் உற்பத்தியாகும் அல்லது அங்கிருந்து ஏற்றுமதி செய்யப் படும் அடர்த்தியான இழைகள் மீதான பொருள் குவிப்பு வரியினை அரசு சமீபத்தில் ரத்து செய்துள்ளது.
    • மூங்கில் இழை தவிர்த்து அடர் இழைகள் (viscose staple fibre) மீதான பொருள் குவிப்பு வரியை அரசு ரத்து செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்