TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 11 , 2021 1080 days 538 0
  • விலங்குகள் மரபணு வளங்களுக்கான தேசியப் பணியகமானது மண்டா வகை எருமை இனத்தை இந்தியாவில் காணப்படும் 19வது தனித்துவமான எருமைகளின் இனமாக அங்கீகரித்துள்ளது.
    • இது கிழக்குத் தொடர்ச்சி மலை மற்றும் ஒடிசாவின் கோராபுட் பகுதியில் உள்ள பீடபூமியில் காணப்படுகிறது.
  • விமானப் படையின் தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதெளரியா ஹவாயில் உள்ள ஹிக்காம் - ஜாயிண்ட் பேஸ் பேர்ல் துறைமுகத்தில் மூன்று நாள் நடைபெறும் பசிபிக்  விமானப் படையின் தலைமை தளபதிகள் கருத்தரங்கு 2021 எனும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
    • இந்த நிகழ்வு "Enduring Cooperation towards Regional Stability" (பிராந்திய நிலைப்புத் தன்மையை நோக்கி ஒத்துழைப்பை நீட்டிப்பது) என்ற கருத்துருவைக் கொண்டு நடைபெற்றது.
  • ஆஸ்திரேலியாவில் இந்தியக் கடற்படை மற்றும் ராயல் ஆஸ்திரேலியக் கடற்படை ஆகியவற்றுக்கு இடையேயான இருதரப்புக் கடற்படைப் பயிற்சியான AUSINDEX என்ற பயிற்சியின் 4வது பதிப்பு தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்