மெக்சிகோ நாட்டின் உச்ச நீதிமன்றமானது கருக்கலைப்பினை சட்ட விரோதம் அற்றதாக அறிவித்து, கருவுறுதலைத் தடுக்கும் செயல்முறைகள் மீதான குற்றவியல் தண்டனைகளை அரசியலமைப்பிற்கு முரணானதாக அறிவித்தது.
இரயில்கள் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இந்திய இரயில்வே இழப்பீடு வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அசாம் மாநில அரசானது 2030 ஆம் ஆண்டுக்குள் புதைபடிம எரிபொருள்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டினைப் படிப்படியாக குறைப்பதற்காக மின்சார வாகனக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மிக உயரமான காற்றுச் சுத்திகரிப்புக் கோபுரமானது சண்டிகர் ஒன்றியப் பிரதேசத்தில் திறக்கப்பட்டுள்ளது.
இது நாட்டின் மிக உயரமான காற்றுச் சுத்திகரிப்பு கோபுரமாகும்.
சீனா ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள தாலிபன் அரசினை ஆதரித்து ஆப்கானிஸ்தான் நாட்டிற்காக 31 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதி உதவியாக வழங்கியுள்ளது.
முதலாவது T20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் தலைவராக இருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் M.S. தோனி வரவிருக்கும் 2021 ஆம் ஆண்டு T20 உலகக் கோப்பைப் போட்டிக்கான அணியை வழிநடத்துபவராக (team mentor) இந்திய அணியில் மீண்டும் இணைந்துள்ளார்.
புவி அறிவியல் துறையில் இந்தியா மற்றும் ரஷ்யா ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பு மீதான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நடிகை தமன்னா பாட்டியா ‘Back to the Roots’ என்ற தனது புத்தகத்தினை வெளியிட்டு உள்ளார்.
பிரபல வாழ்க்கைமுறைப் பயிற்சியாளர் லூக் கௌடின் ஹோ என்பவருடன் இணைந்து இவர் இப்புத்தகத்தினை எழுதியுள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷான் டெயிட் (Shaun Tait ) புதுச்சேரி கிரிக்கெட் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப் பட்டு உள்ளார்.
இவர் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக 5 மாதக் காலத்திற்கு நியமிக்கப்பட்டார்.