TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 15 , 2021 1076 days 479 0
  • உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது அதிக சாம்பல் கூறுகளைக் கொண்ட நிலக்கரி வாயுவாக்கல் செயல்முறையை அடிப்படையாகக் கொண்ட மெத்தனால் உற்பத்தி ஆலையானது ஹைதராபாத்திலுள்ள பாரத் கனரக மின்சாரப் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் திறக்கப்பட்டுள்ளது.
    • இதற்கு நிதி ஆயோக், இந்தியப் பிரதமர் அலுவலகம் மற்றும் நிலக்கரி அமைச்சகம் ஆகியவற்றின் முன்னெடுப்பினால் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையினால் நிதி உதவி வழங்கப்படுகிறது.
  • அரசியலமைப்பின் 275வது சட்டப்பிரிவின் கீழ் 17 மாநிலங்களுக்கு ரூ.9871 கோடி மதிப்பிலான வருவாய்ப் பற்றாக்குறை மானியத்தின் 6வது மாதத் தவணையினை நிதி அமைச்சகம் வழங்கியது.
    • இவை 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் 2021-22 ஆம் ஆண்டுக்கு 17 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது.
  • டோக்கியோ விளையாட்டுகளுக்கு வீரர்களை அனுப்பத் தவறியதால், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியானது (ஐஓசி) வட கொரியாவை 2022 ஆம் ஆண்டின் இறுதி வரை போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து தடை விதித்துள்ளது.
    • சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்த முடிவானது வட கொரியாவால் பெய்ஜிங் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்பதைத் தெரிவிக்கிறது.
  • பாஜகவின் தலைவரான விஜய் ரூபானி அவர்கள் குஜராத் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
  • இந்தியாவும் ஜப்பானும் தங்கள் ஆறாவது கடல்சார் விவகாரம் சார்ந்த ஒரு பேச்சு வார்த்தையை நடத்தியது.
    • இதன் முதல் பதிப்பானது 2013 ஆம் ஆண்டில் புது தில்லியில் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்