TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 16 , 2021 1075 days 447 0
  • எழுத்தாளர் சூசன்னா கிளார்க் என்பவர் ‘பிரனேசி என்ற அவருடைய ஒரு புதினத்திற்காக 2021 ஆம் ஆண்டின் புனைவுக் கதைக்கான மகளிர் பரிசினை வென்று உள்ளார்.
  • இந்திய குழிப் பந்தாட்ட வீரரான ஜீவ் மில்கா சிங் மதிப்புமிக்க 10 ஆண்டுகால துபாய் நுழைவு இசைவுச் சீட்டினைப் பெற்ற உலகின் முதல் தொழில்முறைக் குழிப்பந்தாட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குநர் பவன் குமார் கோயங்கா, இந்திய தேசிய விண்வெளி மேம்பாட்டு அங்கீகார மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலிகார் எனுமிடத்தில் அமைக்கப்பட உள்ள ராஜா மஹேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டியுள்ளார்.
    • ஆரிய பீஷ்வா என்றும் அறியப்படும் பிரதாப் சிங் 1911 ஆம் ஆண்டு நடைபெற்ற பால்கன் போரில் அங்கம் வகித்தவராவார்.
  • அதிகாரிகள் தரநிலையிலான பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டினை 30 சதவீதத்திலிருந்து 40 சதவிகிதமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
  • Colexion என்ற ஒரு மிகப்பெரிய உரிமம் பெற்ற பரிமாற்றம் செய்ய இயலாத அனுமதித் தளமானது தனது முறையான தொடக்கத்தினை அறிவித்துள்ளது.
    • Colexion என்பது விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் கலை ஆகிய துறைகளுக்கான பரிமாற்றம் செய்ய இயலாத அனுமதி வழங்கும் ஒரு தளமாகும்.
  • சுவர்ணிம் விஜய் வர்ஸ் மஷால் () வெற்றி தீபமானது அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்திலுள்ள தஹூங் எனுமிடத்தை வந்தடைந்தது.
    • 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரில் பெற்ற வெற்றியின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த வெற்றி தீபமானது நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டது.
  • உச்சநீதிமன்றமானது ஒரு பணியாளர் தன்னைக் குறிப்பிட்ட இடத்திற்கு மாற்றுமாறு வலியுறுத்த இயலாது என்றும், தேவையைக் கருத்தில் கொண்டு முதலாளி மட்டுமே ஊழியர்களை இடம் மாற்ற இயலும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்