TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 21 , 2021 1070 days 509 0
  • MyGovIndia தளமானது இந்தியப் புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பத் தொழில் முனைவோர்களுக்காககோளரங்கப் புதுமை சவாலை” (Planetarium Innovation Challenge) தொடங்கியுள்ளது.
  • கலிபோர்னியாவில் ஏற்பட்ட இரண்டு காட்டுத் தீயானது சிக்வோயா தேசியப் பூங்காவினூடே (Sequoia National Park) பரவி வருகின்றது.
    • அமெரிக்காவின் சியரா நெவாடா உலகின் மிகப்பெரிய மரத்தின் வாழ்விடமாக உள்ளது.
  • நாகாலாந்து மாநிலத்தின் முதலாவது மற்றும் இந்தியாவின் 61வது இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா மையமானது கொஹிமாவில் திறக்கப்ப ட்டது.
  • ஹங்கேரி நாடானது பிட்காயின் முறையை நிறுவியவரான சதோஷி நாகமோட்டோ (Satoshi Nakamoto) என்பவரின் உருவச் சிலையை புதாபெஸ்ட் என்னுமிடத்தில் நிறுவி உள்ளது.
  • நிதி ஆயோக் அமைப்பானது இந்தியாவிலுள்ள 112 உயர் லட்சிய மாவட்டங்களிலுள்ள மாணாக்கர்களுக்கு இலவசக் கல்வியை வழங்குவதற்காக வேண்டி BYJU’S எனும் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது.
  • Yahoo நிறுவனமானது டின்டர் (Tinder) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜிம் லான்சோன் என்பவரை யாகூ (Yahoo) நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக  நியமித்துள்ளது.
  • காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேப்டன் அமரிந்தர் சிங் தனது பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
  • 6வது பிரிக்ஸ் இளம் விஞ்ஞானிகள் மன்றத்தை இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையானது பெங்களூருவின் தேசிய மேம்பாட்டு ஆய்வுக் கழகத்துடன் இணைந்து நடத்தியது.
  • பாரத் மிகுமின் நிறுவனமானது இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின்னழுத்த ஆலையை ஆந்திராவில் தொடங்க முடிவு செய்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டிற்குள் 175 ஜிகாவாட் அளவிற்குப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறன் மற்றும் 2030 ஆம் ஆண்டிற்குள் 450 ஜிகாவாட் அளவிற்குப் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் உற்பத்தித் திறன் என்ற ஒரு லட்சிய இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.
  • டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனமானது 200 பில்லியன் டாலர் என்ற மதிப்பிலான  சந்தை மூலதனத்தைத் தாண்டிய இரண்டாவது இந்திய நிறுவனம் ஆகும்.
    • 2020 ஆம் ஆண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த மைல்கல்லைத் தாண்டிய முதல் இந்திய நிறுவனம் ஆகும்.
  • இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட ஒரு நிதி வெளியீட்டு இதழான யூரோமணி என்ற இதழால்  டிபிஎஸ் வங்கியானது உலகின் சிறந்த வங்கி (தொடர்ந்து 4 வது முறை) என்று பெயரிடப்பட்டுள்ளது.
    • சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட டிபிஎஸ் வங்கியானது உலகின் சிறந்த டிஜிட்டல் வங்கி என்ற பெயரையும் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்