‘Batsman’ என்ற ஒரு சொற்கூறினைப் பாலினச் சமநிலையைக் குறிக்கும் வகையில் ‘Batter’ என்று MCC அமைப்பு மாற்றியுள்ளது.
MCC என்பதன் விரிவாக்கம் Marylebone Cricket Club என்பதாகும்.
ஒடிசா மாநிலமானது கலிங்கா மைதானத்தில் ஆடவருக்கான ஹாக்கி ஜுனியர் உலகக் கோப்பைப் போட்டியை நடத்த உள்ளது.
இந்திய அணி வெற்றி பெற்ற 2016 ஆம் ஆண்டில் நடைபெற்றப் போட்டியை லக்னோ நடத்தியது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் 3வது மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீட்டினை மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவ்யா வெளியிட்டுள்ளார்.
இது உணவுப் பாதுகாப்பு தொடர்பான 5 அளவுருக்களின் அடிப்படையில் மாநிலங்களின் செயல்திறனைமதிப்பிடுவதற்கான ஒரு குறியீடாகும்.
1961 ஆம் ஆண்டுவருமான வரிச் சட்டத்தின் விதிமுறைகளை நிதி அமைச்சகம் தளர்த்தியுள்ளது.
இது பட்டியலினப் பழங்குடியினர் சமூகத்தின் ஓர் உறுப்பினருக்கு பட்டியலிடப் பட்ட வங்கிகளினால் வழங்கப்படும் வட்டி வழங்கீடு மீதான வருமான வரிப் பிடித்தத்துடன் தொடர்புடையதாகும்.