TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 27 , 2021 1064 days 509 0
  • கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில்  சேர விரும்பும் மாணவர்கள், தங்களது திருமணத்தின் போது வரதட்சணை  கொடுக்கவோ, கேட்கவோ அல்லது ஏற்றுக் கொள்ளவோ மாட்டோம் என்ற அறிவிப்பில் கையெழுத்திட வேண்டும்.
  • கோவிட்-19 வைரசின் டெல்டா மாற்றுருவானது உலகின் இதுவரையில் பரவலாக காணப்படும் ஒரு வகையாகும்.
    • இது ஆல்ஃபா, பீட்டா, காமா போன்ற பல்வேறு மாற்றுருக்களை விஞ்சியுள்ளது.
  • வங்காளதேசத்தைச் சேர்ந்த ஃபைரூஸ் ஃபைசா பீதர் என்பவர் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் 2021 ஆம் ஆண்டு சேஞ்ச்மேக்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • தனிப்பட்ட அனுபவத்தின் மூலம் அல்லது தலைமைப் பதவியை பயன்படுத்தி மாற்றத்தை ஊக்குவித்த ஒரு நபருக்கு இந்த விருதானது அங்கீகாரம் அளிக்கிறது.
  • நாசா நிறுவனத்தின் ஹப்பிள் தொலைநோக்கியானது 6 மிகப்பெரிய செயலற்ற அண்டங்களைக் கண்டறிந்துள்ளது.
    • இந்த அண்டங்களில், நட்சத்திரங்களை உருவாக்கத் தேவையான குளிர்ந்த ஹைட்ரஜன் வாயுவானது தீர்ந்து விட்டது.
  • காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையமானது முதன்முறையாக துசார் பட்டு நூல் உற்பத்தி மையத்தை அமைப்பதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
    • இந்த மையமானது ஒடிசாவில் கட்டாக் மாவட்டத்தில் சௌதார் என்னுமிடத்தில் அமைக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்