FASTER (மின்னணுப் பதிவுகளின் விரைவான மற்றும் பாதுகாப்பான பரிமாற்றம்) எனப்படும் மின்னணு அமைப்பினை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
மின்னணு முறையில் அங்கீகரிக்கப்பட்ட நகல்களை நீதிமன்றத்திலிருந்து சிறைச் சாலைகளுக்கு மாற்ற இந்த FASTER அமைப்பானது பயன்படுத்தப் படும்.
டெக்சாஸ், ஃப்ளோரிடா, நியூ ஜெர்சி, ஒஹாயோ மற்றும் மாசாசுசெட்ஸ் உள்ளிட்ட பல அமெரிக்க மாகாணங்கள் அக்டோபர் மாதத்தினை இந்துப் பாரம்பரிய மாதமாக அறிவித்துள்ளன.
இந்துத்துவமானது அதன் தனித்துவமான வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் மூலம் அமெரிக்காவிற்கு ‘பெரிதும் பங்காற்றியுள்ளதாக’ அவை கூறுகின்றன.
மகளிர் உரிமைகளுக்கான ஆர்வலரும், பிரபல எழுத்தாளருமான பஞ்சாபின் கமலா பசின் என்பவர் புற்றுநோயுடனான தனது போராட்டத்தில் உயிரிழந்தார்.
புகழ்பெற்றக்கவிஞரும் எழுத்தாளருமான இவர் பாலினக் கோட்பாடு மற்றும் பெண்ணியம் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
99வது இராணுவப் பொறியியல் பணிகள் நிறுவன தினமானது 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று அனுசரிக்கப் பட்டது.
இராணுவப் பொறியியல் பணிகளானது பாதுகாப்புத் துறை அமைச்சகத்துடன் தொடர்புடைய அமைப்புகள் மற்றும் ஆயுதப் படைகளுக்கு பின்னணியிலான ஆதரவினை வழங்குகிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பினால் நிர்ணயிக்கப்பட்ட உலகளாவியத் தகவல் அணுகலுக்கான சர்வதேச தினமானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
இந்த ஆண்டுக்கான இத்தினத்தின் கருத்துரு, “The Right to know – Building Back Better with Access to Information” என்பதாகும்.