TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 30 , 2021 1061 days 481 0
  • இந்திய நாட்டைச் சேர்ந்த சானியா மிர்சா மற்றும் சீன நாட்டைச் சேர்ந்த சாங் குவாய் ஆகியோர் இணைந்து ஒஸ்ட்ராவா ஓபன் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவிற்கான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றனர்.
    • இப்போட்டியானது செக் குடியரசு நாட்டின் ஒஸ்ட்ராவா என்னுமிடத்தில் நடத்தப் பட்டது.
  • மூத்தச் சட்டமன்ற உறுப்பினரான நிமாபென் ஆச்சாரியா சமீபத்தில் குஜராத் மாநிலச் சட்டசபையின் முதல் பெண் சபாநாயகராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • தற்போது பாலைநிலமாக காணப்படும் ஆஸ்திரேலியாவின் பின்பா ஏரிக்கு அருகே பண்டையக் கால கழுகின் எஞ்சிய பாகங்களை அறிவியலாளர்கள் அகழ்ந்தெடுத்து உள்ளனர்.
    • இந்தப் பிரம்மாண்ட பறவையானது 25 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று நம்பப் படுகிறது.
  • செப்டம்பர் 29 ஆம் தேதியானது இந்தியாவில் தேசிய காபி தினமாக அனுசரிக்கப் படுகிறது.
  • சர்வதேச இறை நிந்தனை தினம் அல்லது சர்வதேச இறை நிந்தனை உரிமைகள் தினம் எனவும் அழைக்கப்படும் இறை நிந்தனை தினமானது செப்டம்பர் 30 அன்று அனுசரிக்கப் படுகிறது.
    • இத்தினமானது தனிநபர்கள் மற்றும் குழுவினருக்கு இறை நிந்தனைச் சட்டங்கள் குறித்த கல்வியையும் கருத்துச் சுதந்திரத்திற்கானப் பாதுகாப்பினையும் வழங்கச் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்