TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 2 , 2021 1059 days 544 0
  • மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் JANCARE” எனத் தலைப்பிடப்பட்ட அம்ரித் கிராண்ட் சவால் என்ற திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
    • இந்தியாவின் சுகாதார நலம் சார்ந்த சவால்களை எதிர்கொள்வதற்கான புதிய கருத்துக்கள் மற்றும் தீர்வுகள் போன்றவற்றைக் கொண்டு வரும் 75 புத்தாக்க நிறுவனங்களை அடையாளம் காணுவதை நோக்கமாகக் கொண்டு இது  தொடங்கப் பட்டுள்ளது.
  • சீனாவிற்கு அடுத்தபடியாக துபாய் நாட்டின் 2வது மிகப்பெரிய வர்த்தகப் பங்குதாரராக இந்தியா உருவெடுத்துள்ளது.
    • அமெரிக்கா 3வது இடத்தில் உள்ளது.
  • ஏமன் நாட்டைச் சேர்ந்த மனிதநேய அமைப்பு ஒன்று 2021 ஆம் ஆண்டு UNHCR நான்சென் அகதிகள் விருதிற்குத் தேர்வாகியுள்ளது.
    • மனிதநேய மேம்பாட்டிற்கான ஜீல் அல்பெனா சங்கம் என்ற இந்த அமைப்பானது 2017 ஆம் ஆண்டில் அமீன் ஜீப்ரான் என்பவரால் நிறுவப்பட்டது.
  • வடகொரிய நாடானது ஹ்வாசாங்-8 என்ற ஒரு புதிய மீயொலி ஏவுகணையினை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது.
    • இந்த புதிய மீயொலி ஏவுகணைகள், உந்துவிசை ஆயுத அமைப்புடன் ஒப்பிடப் படுகையில் குறைவான உயரத்தில்  பறக்கக் கூடியதாகும்.
  • தேசிய கூடைப்பந்து சங்கமானது ரன்வீர் சிங் என்ற நடிகரை இந்தியாவிற்கான தனது விளம்பரத் தூதராக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்