TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 3 , 2021 1058 days 463 0
  • குடியரசுத் துணைத் தலைவர் M. வெங்கய்யா நாயுடு அவர்கள் மூத்த வயோதிக மருத்துவர் V.S. நடராஜன் என்பவருக்கு வயோஸ்ரேஷ்த சம்மான் தேசிய விருதினை வழங்கினார்.
    • முதியோரின் ஆரோக்கிய நலனுக்காக இவர் தனது நிறுவனம் (V.S. நடராஜன் வயோதிக மருத்துவ அறக்கட்டளை) மூலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
  • இந்திய மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் இடையிலான முதலாவது பிங்க் பந்து பகல்-இரவு டெஸ்ட் போட்டியானது, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து எனுமிடத்தில் உள்ள கராரா ஓவல் எனுமிடத்தில்  நடத்தப் பட்டது.
    • இதில் இந்திய அணிக்கு மிதாலி ராஜ் தலைமை தாங்கினார்.
  • அமெரிக்க மீன்வளம் மற்றும் வனவிலங்குச் சேவைகள் அமைப்பின் கூற்றுப்படி, அமெரிக்கப் பெரும் தேனீக்களின் (பம்பில் தேனீ) எண்ணிக்கையானது கடந்த 20 ஆண்டுகளில் 89% வரை குறைந்துள்ளது.
    • இந்த தேனீ இனமானது அருகிவரும் இனமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது
  • நிதி ஆயோக் அமைப்பானது மாநில ஊட்டச்சத்து நிலை’ (விவரக்குறிப்பு) என்ற ஒரு அறிக்கையினை வெளியிட்டது.
    • இந்த அறிக்கையில் 19 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் தனது ஊட்டச்சத்து விவரக் குறிப்பு அறிக்கையினைப் பெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்