TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 6 , 2021 1055 days 533 0
  • 2021 ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசானது டேவிட் ஜூலியஸ் மற்றும்  ஆர்டெம் படபௌசியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
    • வெப்பநிலை மற்றும் தொடுதிறன் உணர்வி போன்றவற்றைக் கண்டறிந்ததற்காக இவர்களுக்கு  இந்த விருதானது வழங்கப்பட்டது.
  • கிழக்கு அண்டார்டிகா மற்றும் வெடெல் கடல் ஆகிய  இடங்களைக் கடல்சார்ந்த பாதுகாக்கப்பட்ட இடங்களாக நியமிக்கப் படுவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு முன்மொழிதலுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
  • உலகம் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று உலக புன்னகைத் தினத்தை அனுசரிக்கிறது.
    • இந்த ஆண்டு இத்தினமானது அக்டோபர் 01 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 03 உலக தன்னடக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது.
    • மதுப்பழக்கத்தைக் கைவிட வேண்டி இத்தினம் மக்களை ஊக்குவிக்கிறது.
  • ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 03 உலக இயற்கை தினமாக அனுசரிக்கப்படுகிறது.
    • இத்தினமானது நமது அற்புதமான இயற்கையைப் பாதுகாப்பது குறித்த ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கத்தார் நாட்டின் முதல் சட்டசபைத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • தேர்தலில் பங்கேற்ற 26 பெண் வேட்பாளர்களில் எவரும் வெற்றி பெறவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்