TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 8 , 2021 1053 days 509 0
  • 2021 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசானது பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் W.C. மேக்மில்லன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
    • சமச்சீரற்றக் கரிம வினையூக்கியை உருவாக்கியதற்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தியா-ஜப்பான் இடையிலான JIMEX எனப்படும் இருதரப்பு கடல்சார் பயிற்சியானது அரபிக் கடலில் நடத்தப் பட்டது.
    • JIMEX என்பது இந்தியக் கடற்படை மற்றும் ஜப்பான் நாட்டின் கடல்சார் சுய பாதுகாப்பு (தற்காப்பு) படை ஆகியவற்றிற்கு இடையே 2012 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பயிற்சிகளாகும்.
  • செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கோள்களுக்கு இடையே உள்ள மிகப்பெரிய குறுங்கோள் பட்டை பற்றி ஆய்வு மேற்கொள்வதற்காக ஓர் ஆய்வுக் கலத்தினை அனுப்புவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்தது.
    • இது பேரண்டத்தின் தோற்றம் பற்றிய தகவல்களை சேகரிப்பதற்கான ஒரு ஆய்வு ஆகும்.
  • 2030 ஆம் ஆண்டுக்குள் வேளாண்மை மற்றும் வனத்துறைகளில் முறையே பசுமை இல்ல வாயுக்களின்  உமிழ்வினை 55% மற்றும் 65% என்ற அளவிற்கு குறைப்பதற்கான ஒரு திட்டத்திற்கு டென்மார்க் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்