TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 11 , 2021 1050 days 479 0
  • 2021 ஆம் ஆண்டு உலக மல்யுத்த சாம்பியன்சிப் போட்டியின் 50 கிலோ கிராம் எடைப் பிரிவில் வெண்கலம் வென்றதன் மூலம் சரிதா மோர் தனது முதல் பதக்கத்தினை வென்று உள்ளார்.
    • இப்போட்டியானது நார்வே நாட்டின் ஓஸ்லோ என்னுமிடத்தில் நடத்தப் பட்டது.
  • தலைமைப் பொருளாதார ஆலோசகர் K.V. சுப்பிரமணியன், இந்திய நிதி அமைச்சகத்தில் தனது 3 ஆண்டு காலப் பதவிக் காலம் முடிந்த பிறகு கல்வித் துறைக்கு திரும்ப உள்ளதாக முடிவு செய்துள்ளார்.
  • இந்தியா-ஐக்கிய ராஜ்ஜியம் இடையிலான நிறுவன அளவிலான கூட்டு இராணுவப் பயிற்சியான அஜயா வாரியர் என்ற பயிற்சியின் 6வது பதிப்பானது சமீபத்தில் தொடங்கப் பட்டது.
    • இப்பயிற்சியானது உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள சௌபாதியா என்னுமிடத்தில் தொடங்கியது.
  • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டு ஹாக்கிப் போட்டியிலிருந்து  (2022) இந்தியா பங்கேற்காமல் வெளியேற இருக்கிறது.
    • கோவிட்-19 தொற்று மற்றும் இந்தியாவிலிருந்துப் பயணிக்கும் பயணிகளுக்கு ஐக்கியப் பேரரசில் விதிக்கப் படும் பாகுபாடு மிக்க தனிமைப்படுத்துதல் விதிகள் போன்ற காரணங்களைக் குறிப்பிட்டு இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்