TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 19 , 2021 1042 days 481 0
  • பதினைந்து வயதான திவ்யா தேஷ்முக் இந்தியாவின் 21வது பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
    • ஹங்கேரியின் புதாபெஸ்டில் நடைபெற்ற பர்ஸ்ட் சாட்டர்டே கிராண்ட் மாஸ்டர் என்ற போட்டியில் இவர் இந்தச் சாதனையை புரிந்தார்.
  • 2022 ஆம் ஆண்டிற்கான மகளிர் ஆசிய கோப்பைப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ முழக்கமானது அனைவருக்குமான எங்கள் இலக்கு” (Our Goal for All) என்பதாகும்.
    • இது ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு மற்றும் உள்நாட்டு ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றால் வெளியிடப் பட்டது.
  • ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் தேதியானது உலக அதிர்ச்சி தினமாக அனுசரிக்கப் படுகிறது.
    • உலகம் முழுவதிலும் இறப்பு மற்றும் இயலாமைக்குக் காரணமாக விளங்குகின்ற அதிகரித்து வரும் விபத்துகள் மற்றும் காயங்கள் பற்றி குறிப்பிட்டுக் காட்டவும், அதனைத் தடுப்புதற்கான அவசியத்தைக் குறிப்பிட்டுக் காட்டவும் வேண்டி இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கொச்சினை டிமென்சியா நோயால் (மறதி நோய்) பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதுவான நகராக அறிவித்தார்.
    • உத்போத் எனப்படும் டிமென்சியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உகந்த மாவட்டத் திட்டத்தினைத் தொடங்கி வைக்கும் போது இந்த அறிவிப்பினை அவர் வெளியிட்டார்.
  • உலகின் குறைவான வருமானம் உடைய நாடுகளின் கடன் சுமையில் 12% உயர்வு ஏற்படும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.
    • உலக வங்கியின் 2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேசக் கடன் புள்ளி விவரங்கள் எனும் அறிக்கையானது, குறைவான மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகள் எதிர் கொள்ளும் கடன் பாதிப்புகளில் வியக்குத்தகு உயர்வினைக் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்