TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 20 , 2021 1041 days 460 0
  • இந்திய அணியின் முன்னாள் மட்டைப்பந்து வீரரான ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.
    • இவர் ரவி சாஸ்திரியை அடுத்து இந்தப் பதவியை ஏற்க உள்ளார்.
  • இந்தியாவின் கோவிட்-19 தடுப்பூசி வழங்கீடு குறித்த ஒரு கீதத்தினை (பாரத் கா திகாகரன்) மத்திய அரசு வெளியிட்டது.
    • இந்தப் பாடலை பிரபலப் பாடகர் பத்மஸ்ரீ கைலாஷ் கேர் பாடியுள்ளார்.
  • இந்திய இராணுவத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கோர்கா ரைபிள்ஸ் (எல்லைப் படை) படையின் 5வது படைப்பிரிவினைச் சேர்ந்த ஒரு அணியானது மதிப்பு மிக்க  கேம்பிரிய ரோந்துப் பயிற்சியில் தங்கப் பதக்கம் வென்றது.
    • இது ஐக்கிய ராஜ்ஜியத்தில் நடத்தப் பட்டது.
  • சர்வதேச சூரியசக்திக் கூட்டிணைவில் இஸ்ரேல் புதிய உறுப்பினராக இணைந்தது.
  • E.R.  சேக் என்பவர் ஆயுதத் தளவாட இயக்குநரகத்தின் (ஒருங்கிணைப்பு  மற்றும் பணிகள்) முதலாவது தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
    • இது ஆயுதத் தொழிற்சாலை வாரியத்திற்குப் பதிலாக புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்