TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 22 , 2021 1039 days 487 0
  • சர்வதேச நாணய நிதியத்தின் ஆராய்ச்சித் துறையின் தலைமைப் பொருளாதார வல்லுநரும் இயக்குநருமான கீதா கோபிநாத் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தனது பதவியிலிருந்து விலக உள்ளார்.
    • இவர் சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது பெண் பொருளாதார வல்லுநர் ஆவார்.
  • வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி பிரான்சு நாட்டில் நடைபெற்ற சார்லேவில்லே தேசியப் போட்டியின் மகளிருக்கான தனிநபர் வாள்வீச்சுப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
    • இவர் தற்போது உலகளவில் 50வது இடத்திலும் இந்திய அளவில் முதலிடத்திலும் உள்ள வாள்வீச்சு வீராங்கனை ஆவார்.
  • இந்திய அமெரிக்க அறிவியலாளரான டாக்டர் விவேக் லால் என்பவருக்கு துபாயில் சமீபத்தில் நடைபெற்ற ரிட்டோசா ஃபேமிலி என்ற ஒரு உச்சி மாநாட்டில் வாழ்நாள் சாதனையாளர் விருதானது வழங்கப் பட்டது.
    • இந்திய-அமெரிக்கப் பாதுகாப்பு வர்த்தகத்தினை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தமைக்காக டாக்டர் லால் பிரபலமாக அறியப் படுகிறார்.
  • உத்தரகாண்ட் மாநிலமானது அதன் அனைத்துத் தகுதியுள்ள மக்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் தவணையை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்