TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 28 , 2021 1033 days 460 0
  • ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் நிபுணர் ஒருவர் ஈரான் நாட்டின் மரண தண்டனையை விதிகளுக்குட்படாமல் உயிரைப் பறித்தல்என்று விவரித்து உள்ளார்.
    • சட்டங்களைச் சீர்திருத்தி மரண தண்டனை விதிமுறையை ரத்து செய்யுமாறு ஈரானிடம் ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியுள்ளது.
  • தமிழக அரசானது உதயன் என்பவரை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக நியமித்துள்ளது.
  • தனியார் துறை வங்கியான ICICI வங்கியானது இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் சந்தை மூலதனத்தை விஞ்சி, சந்தை மதிப்பில் 5வது மிகப்பெரிய நிறுவனமாக மாறியுள்ளது.
    • HDFC வங்கியை அடுத்து, சந்தை மூலதனத்தின் அடிப்படையில் மும்பை பங்குச் சந்தையில் முதல் 5 நிறுவனங்கள் பட்டியலில் சேர்ந்த 2வது வங்கி ICICI வங்கி ஆகும்.
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஸ்ரீநகர், சார்ஜா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றுக்கு இடையிலான முதல் நேரடி சர்வதேச விமானத்தினைத் தொடங்கி வைத்தார்.
    • இந்தியாவின் மலிவு விலையிலான ஏர்லைன் (விமான) நிறுவனமான GO FIRST, ஸ்ரீநகர் முதல் சார்ஜா வரை நேரடி விமானங்களை இயக்கத் தொடங்கிய முதல் விமான நிறுவனம் ஆகும்.
  • சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் தேசியப் பழங்குடியினர் நடனத் திருவிழாவானது அக்டோபர் 28 முதல் 30 வரை நடைபெற உள்ளது.
    • தேசியப் பழங்குடியினர் நடனத் திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த பல கலைஞர்கள் பங்கேற்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்