TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 1 , 2021 1029 days 530 0
  • நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அவர்களின் பதவிக் காலத்தினை மேலும் 3 ஆண்டுகளுக்கு மறுநியமனம் செய்வதற்கு வேண்டி தனது ஒப்புதலை அளித்துள்ளது.
  • இந்தியத் தொல்லியல் துறையானது புவனேஷ்வரின் பழைய நகரப் பகுதியில் உள்ள சுகா – சாரி ஆலயத்தின் வளாகத்தில் மற்றொரு ஆலயத்தின் அடித்தளம் இருப்பதைக் கண்டறிந்தது.
    • கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சிதிலங்களானது 9வது முதல் 12வது நூற்றாண்டு வரையிலான சோமவம்சி காலத்தைச் சேர்ந்தது என்று கணிக்கப் படுகின்றன.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்திய விமானப் படை ஆகியவை இணைந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீண்டதூர வரம்புடைய வெடிகுண்டுகளை வான்வழித் தளத்தில் வெற்றிகரமாக சோதனை செய்தன.  
  • சூடான் நாட்டில் இருந்து குடிமைசார் ஆட்சிக்கு எதிராக சூடான் இராணுவம் சதிப் புரட்சி நடத்தியதையடுத்து சூடானுக்கு வழங்கும் தனது உதவிகளை உலக வங்கி நிறுத்தியுள்ளது.
  • A.Y.4.2 என்ற கொரோனா வைரசின் புதிய மாற்றுருவானது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.
    • தற்போது இந்தியாவில் இந்தப் புதிய மாற்றுருவினால் அதிக பாதிப்புகள் பதிவாகி வருகிறது.
  • தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்கள் மியான்மர் அன்றி தனது வருடாந்திர உச்சி மாநாட்டினைத் தொடங்கி உள்ளனர்.
    • தென்கிழக்காசிய நாடுகள் சங்கமானது அதன் சந்திப்புகளில் தனது உயர்நிலை அதிகாரியை விலக்கியதையடுத்து அதன் உச்சி மாநாட்டில் பங்கேற்பதை மியான்மர் தவிர்த்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்