TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 6 , 2021 1024 days 428 0
  • இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுளார்.
    • இந்தியாவிற்கான கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கிரிக்கெட் ஆலோசகக் குழுவினால் இவர் நியமிக்கப்பட்டார்.
  • அமெரிக்க நோய்த் தடுப்பு மையமானது, அமெரிக்காவில் 5 முதல் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பைசர் தடுப்பு மருந்தினைச் செலுத்துவதற்கு அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.  
    • அமெரிக்காவில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ள முதல் கோவிட்-19 தடுப்பூசி இதுவாகும்.
  • ஐம்மு & காஷ்மீர் ஒன்றியப் பிரதேச அரசானது காட்டுக் கோழியினை (Kalij Pheasant) தனது அரசுப் பறவையாக அறிவித்துள்ளது.
    • ஹங்குல் (காஷ்மீர் மான்) எனும் விலங்கானது தொடர்ந்து ஐம்மு & காஷ்மீரின் அரசு விலங்காக திகழும்.
  • நாசாவின் செவ்வாய்க் கிரக உலாவிக் கலமான பெர்சீவரன்ஸ் சூரிய இணைவின் மறைவிலிருந்து வெளியேறி அந்தச் செங்கோளின் மீது தனது பணியை மீண்டும் தொடங்கியுள்ளது.
    • சூரிய இணைவு எனப்படும் இந்த இணைவு ஏற்படும் போது புவியிலிருந்துச் செவ்வாய்க்கு அனுப்பப்படும் கட்டளைகள் சூரியனால் சிதைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்