TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 10 , 2021 1020 days 506 0
  • மகாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த 18 வயதான சங்கல்ப் குப்தா இந்தியாவின் 71வது கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
    • சங்கல்ப் குப்தா செஸ் போட்டியில் 24 நாட்களில் மூன்று அவசியமான கிராண்ட் மாஸ்டர் விதிமுறைகளை நிறைவு செய்த  பிறகு இந்த அந்தஸ்தினை அடைந்தார்.
  • COP26 காலநிலை உச்சி மாநாட்டில் தொடங்கப்பட்ட இங்கிலாந்தின் கிளாஸ்கோ வழி முறைகளில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டார்.
    • இது 2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்துப் பகுதிகளிலும் சுத்தமான மற்றும் மலிவான தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான ஒரு சர்வதேசத் திட்டமாகும்.
  • அமெரிக்காவில் தீபாவளியை ஒரு  கூட்டாட்சி விடுமுறையாக அறிவிப்பதற்கான ஒரு மசோதாவினை பிரதிநிதிகள் சபையில் அறிமுகப்படுத்தியுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
    • இது நியூயார்க்கைச் சேர்ந்த கரோலின் பி மலோனி என்பவர் தலைமையில் மேற்கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்