TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 12 , 2021 1018 days 469 0
  • ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 10 ஆம் தேதி உலக நோய்த்தடுப்புத் தினமாக கொண்டாடப் படுகிறது.
    • தடுப்பூசி-தடுக்கக்கூடிய நோய்களுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசிகளைப் பெறுவதன் ஒரு முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக வேண்டி இந்த நாள் கொண்டாடப் படுகிறது.
  • கொல்கத்தாவைச் சேர்ந்த மித்ரபா குஹா இந்தியாவின் 72வது சதுரங்க விளையாட்டு கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
    • 20 வயதான அவர் செர்பியாவில் நடந்த போட்டியின் போது கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கான தனது மூன்றாவது மற்றும் இறுதித் தகுதியைப் பெற்றதன் மூலம் இந்தச் சாதனையைப்  புரிந்துள்ளார்.
  • இந்தியக் கடற்படையின் அடுத்தத் தளபதியாக வைஸ் அட்மிரல் ஆர் ஹரி குமார் என்பவர் பொறுப்பேற்க உள்ளார்.
    • தற்போதைய, அட்மிரல் கரம்பீர் சிங் நவம்பர் 30 அன்று ஓய்வு பெற்ற பிறகு இவர் அந்தப் பதவியில் பொறுப்பேற்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்