நேபாள ராணுவத் தளபதி பிரபு ராம் சர்மாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்திய ராணுவத்தின் கெளரவ ஜெனரல் (இராணுவ தளபதி) பதவியை வழங்கினார்.
இரு நாடுகளும் பரஸ்பர ரீதியில் அதன் ராணுவத் தளபதிகளுக்கு ஜெனரல் (இராணுவ தளபதி) பதவியை வழங்குவது ஒரு வழக்கமாகும்.
ஆம்வே இந்தியாவின் விளம்பரத் தூதராக அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற ஒரு டென்னிஸ் போட்டியில், நோவக் ஜோகோவிச் (செர்பியா) டானில் மெட்வடேவை (ரஷ்யா) தோற்கடித்து 37வது மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.
இது அவரது 6வது பாரீஸ் பட்டமாகும்.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை உறுதி செய்துள்ளார்.
ஒடிசா அரசானது ரக்சக் என்ற பெயரில் ஒரு முதல் வகையான சாலைப் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.