TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 15 , 2021 1015 days 504 0
  • இந்தியாவின் முதலாவது நேரடி தேசிய யோகாசன சாம்பியன்சிப் போட்டியானது ஒடிசாவிலுள்ள புவனேஷ்வர் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • இது ஒடிசா மாநிலத்துடன் இணைந்து தேசிய யோகாசன விளையாட்டுக்  கூட்டமைப்பினால் நடத்தப்படுகிறது.
  • கத்தாரில் நடைபெற உள்ள 2022 FIFA உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வான முதல் தென் அமெரிக்க அணியாக பிரேசில் அணி மாறியுள்ளது.
  • PGIM இந்திய பரஸ்பர நிதியமானது இந்தியாவின் முதல் உலகளாவிய வீட்டு மனைப் பத்திர நிதியத்தினைத் தொடங்கியுள்ளது.
  • மத்திய உள்துறை அமைச்சகமானது ஹரியானாவிலுள்ள ஃபடேஹாபாத் (Fatehabad) மாவட்டத்தின் பட்டுக் கலன் காவல் நிலையத்தினை 2021 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் முதல் மூன்று முன்னணி காவல் நிலையங்களில் ஒன்றாக அங்கீகரித்து உள்ளது.
  • இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் விமானநிறுவனமானது, பயணிகள் தங்களது பயணச் சீட்டுகளுக்கு 3, 6 அல்லது 12 தவணைகளில் பணம் செலுத்தும் வகையிலான புதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இந்தியாவிலேயே முதன்முறையாக இது போன்ற ஒரு திட்டமானது தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்